2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விபத்தில் கன்றுகுட்டி உயிரிழப்பு வாகனத்தில் பயணித்தவர்கள் மீது தாக்குதல்

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி வீதியில், பசுக்கன்று ஒன்றின் மீது கூலர் வாகனம் மோதியதில், கன்றுகுட்டி உயிரிழந்துள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து, வானத்தில் பயணித்தவர்கள் மீது கிராமத்தவர்கள் தாக்குதல் மேற்கொண்டதில், மூவர் காயமடைந்துள்ளனர்.

கொக்குளாய் பகுதியில் வசித்துவரும் புத்தளம், நீர்கொழும்பைச் சேர்ந்தவர்களின் மீன் ஏற்றும் கூலர் வாகனம் ஒன்று, கருநாட்டுக்கேணிப் பகுதியில், வேகமாக வந்துகொண்டிருந்த போது, வீதியில் நின்ற கன்றுகுட்டியை மோதியுள்ளது.

இதில் கன்றுகுட்டி உயிரிழந்துள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தக் கிராமத்தில் இருந்த இளைஞர்கள் ஆத்திரம் கொண்டு, வாகன சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அதில் பயணித்த இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள், 21. 25, 38 வயதுடையவர்களெனத் தெரிவித்த முல்லைத்தீவு ​பொலிஸார், சம்பவத்தில் காயமடைந்தவர்கள், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .