2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விபத்தில் வயோதிபர் பலி

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன் 

வவுனியாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.    

 பயணம் செல்லும் முகமாக, அந்த வயோதிபர் வவுனியா புதிய பஸ் நிலைய பகுதிக்குச் சென்றுள்ளார். இதன்போது அங்கு தரித்துநின்ற இலங்கை போக்குவரத்து சபையின் மாகோசாலைக்கு சொந்தமான பஸ் பின்பகுதி நோக்கி செலுத்தப்பட்டிருந்தது. இதன்போது பஸ்ஸின் பின்பகுதியில் நின்றிருந்த வயோதிபரை மோதி தள்ளியது.

விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர், ஓட்டோவில் ஏற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.  

விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .