எஸ்.என். நிபோஜன் / 2017 ஒக்டோபர் 12 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ9 வீதியில், ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இடத்தில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அரைச் சொகுசு பஸ் பாலத்துடன் மோதி, நேற்று (11) அதிகாலை விபத்து இடம்பெற்றது. குறித்த விபத்தில், இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில், இன்று அதிகாலை சென்ற நபர், பாலத்துடன் மோதி நின்ற பஸ்ஸுடன் மோதி உயிரிழந்துள்ளார்.
அந்தவ்கையில், விபத்தின் பின்னர் அவ்விடத்திலிருந்து பஸ் அகற்றப்படாமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago