2025 மே 07, புதன்கிழமை

’விரைவில் காணிகள் கையளிக்கப்படும்’

Niroshini   / 2021 நவம்பர் 04 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

குறுகிய காலத்துக்குள் மிகுதியாக காணப்படுகின்ற பகுதிகளில் இருந்தும் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டு, மக்களிடம் விரைவில் காணிகள் வழங்கப்படுமென, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று (03) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இங்குள்ள பாடசாலைகளுக்கு, மாணவர்கள் ஆர்வத்துடன் செல்வதனை கண்டதாகவும் தெற்கு பகுதியில் மாணவர்களுக்கு பாடசாலைக்கு செல்லும் போது சில அறிவுறுத்தல்கள் பதாதைகள் ஆசிரியர்களால் வழங்கப்படுகின்றது எனவும் கூறினார்.

ஆனால் இங்கு அவ்வாறான நிலை இல்லை. அது மிகவும் சந்தோசமான விடையமாக உள்ளது எனவம், அவர் கூறினார்.

தைரியமான மனிதர்கள் யார் என்றால் இங்குள்ளவர்களையே நான் அழைத்து வந்து காண்பிக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், தைரியமுள்ள மனிதர்கள் இங்குதான் உள்ளனர் எனவும் கூறினார்.

இங்கிலாந்து, சுவீடன், நோர்வே உள்ளிட்ட நாடுகள், இங்கு புதைக்கப்பட்ட வெடிபொருள்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன எனத் தெரிவித்த அவர், 'மிக குறைந்த அளிலான கண்ணிவெடி அகற்றும் பணிகளே இங்கு காணப்படுகின்றது. பெரும்பாலான பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது. இவ்வருட வரவு – செலவுத் திட்டத்தில் இந்த விடயமும் உள்ளடக்கப்படும் எனவும் கூறினார்.

'அதன் ஊடாக வடக்கு - கிழக்கில் உள்ள மக்களின் அபிவிருத்திக்கான பணம் அதிகளவில் பெற்றுக்கொள்ளமுடியும். குறுகிய காலத்துக்குள் மிகுதியாக காணப்படுகின்ற பகுதிகளில் இருந்தும் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டு மக்களிடம் விரைவில் காணிகள் வழங்கப்படும்' எனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X