2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கரைதுறைப்பற்று பிரதேச இளைஞர் சம்மேளனம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளனம் என்பவற்றுக்கு, வட மகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா  ரவிகரனால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டு 2018இல் இருந்தே, ரவிகரன் இவ்வுதவிகளை வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது, கரைதுறைப்பற்றுப் பிரதேச இளைஞர் சம்மேளனத்தினருக்கு 40,000 ரூபாய் பெறுமதியில், கால்பந்து மற்றும் சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன.

அதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு 40,000 ரூபாய் பெறுமதியில் கூடைப்பந்தாட்டத்துக்குரிய சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச இளைஞர் சம்மேளன தலைவர் மு.சொகைல், செயலாளர் ச.சதீஸ், முல்லைத்தீவு மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளன உபசெயலாளர் வை.கீர்த்திகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .