Niroshini / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
இன்னும் ஓரிரு நாள்களில், துணுக்காய் கமநல சேவை நிலையத்தால், வவுனிக்குளம் விவசாயிகளுக்கான உரம் முழுமையாக வழங்கப்படுமென்று, முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் செ.புனிதகுமார் தெரிவித்தார்.
வவுனிக்குளத்தின் கீழ் 3,500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு, ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், உரம் உரிய காலத்தில் கிடைக்கவில்லை என, அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் செ.புனிதகுமாரிடம் கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வவுனிக்குளத்துக்கு பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்தாலும் துணுக்காய் கமநல சேவை நிலையத்தாலும் உரம் வழங்கப்படுவது வழமையென்றார்.
பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்தால் வவுனிக்குளத்துக்கான உரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இன்னும் ஓரிரு நாள்களில் துணுக்காய் கமநல சேவை நிலையத்தால், வவுனிக்குளம் விவசாயிகளுக்கு இறுதிக் கட்ட உரம் முழுமையாக வழங்கப்படுமெனவும் கூறினார்.
கொரோனா வைரஸ் அபாயத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி காரணமாகவே, உரங்களை உரிய காலத்தில் வழங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.
18 minute ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
14 Nov 2025