Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 05 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
முள்ளிவாய்க்கால் கிழக்கில் பெண் ஒருவர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் குறித்த பெண் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் குமரேசன் யோகேஸ்வரி கருத்து தெரிவிக்கையில்,
“பாடசாலை மாணவர்களின் பிரச்சினை பெரியவர்களின் கைகலப்பாக மாறியுள்ளது.
பாடசாலை பிள்ளைகளுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு பெற்றோரை முரண்பட வைத்து தாக்குதலில் முடிந்துள்ளது.
ஒரே குடும்பத்தினை சேர்ந்த உறவினர்களான 5 பேர் எனது வீடு புகுந்து வந்து, என்னை அடித்து கத்தியாலும் வெட்டியுள்ளார்கள். எனது வீட்டுக்கு தீ வைத்து வீட்டின் ஒரு பகுதி ஏரிந்துள்ளது.
கதவினை உடைத்துள்ளார்கள். இந்நிலையில் நான் கல்லால் அவர்களை அடித்தேன். என்னை அடிக்க வந்த ஒருவரின் மண்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து அதன் ஊடாக நான் மருத்துவமனை சென்றேன்.
வீட்டில் எனது கணவன் நான்கு பிள்ளைகளுடன் இருந்த வேளை, இரவு நேரம் மண்வெட்டிபிடியால் கணவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டினையும் சேதப்படுத்தியுள்ளார்கள்.
இச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அடிவாங்கிய எனது கணவனையே கைது செய்ய முயற்சித்துள்ளார்கள்.
நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் முல்லைத்தீவு பொலிஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் இருக்கின்றோம் எங்கள் உயிருக்கு ஏதாவது நடந்தால் அதற்கு பொலிசார்தான் பொறுப்பு” என்றும் தெரிவித்துள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
24 minute ago
26 minute ago
29 minute ago