Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், மாங்குளம் வீதியில், ஒலுமடு கிராமத்தில் மக்களின் வீடு ஒன்றுக்குள் இருந்து இன்று (05) அதிகாலை பாரிய முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர்கள் வீட்டின் கதவினை திறந்து பார்த்த போதே, வீட்டு வாசலில் தரித்து வைத்திருந்த வாகனத்தின் கீழ் முதலை இருப்பதை அவதானித்துள்ளனர்.
இது குறித்து மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், முதலையைப் பிடித்துள்ளனர்.
12.5 அடி நீளம் கொண்ட குறித்த முதலையை, வன்னேரிக்களம் முதலைகள் சரணாலயத்தில் விடுவிப்பதற்காக, அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.
17 minute ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025