2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

‘வீட்டுத்திட்டத்துக்கான நிதியை வழங்கவும்’

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கான நிதியை வழங்குமாறு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

அக்கடிதத்தில், வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்ட அவ்வீடுகளை மக்கள் தமது பங்களிப்புடன் கட்ட ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனரெனவும் அவற்றுக்குரிய நிதி அரசாங்கத்தால் வழங்கப்படுமென உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை நம்பி, தமது மக்கள் தமது சொத்துக்களை அடகு வைத்தும் கடன் வாங்கியும் வீடுகளை கட்ட தொடங்கியிருந்தனரெனத் தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்தால் அவற்றுக்குரிய நிதி இதுவரை வழங்கப்படவில்லையெனவும் கூறியுள்ளார்.

இதனால் மக்கள் நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ளனரெனவும், அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .