2025 மே 22, வியாழக்கிழமை

வீதியில் அதிவேகமாக பயணிக்கும் பஸ்களால் மக்கள் அச்சம்

Editorial   / 2019 ஜூன் 09 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, பரந்தன் வீதியில் பயணிக்கும் தனியார் பஸ்கள், அதிவேகமாக செல்வதால், அதிகளவில் விபத்துகள் ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில், காலை வேளையிலும் மாலை வேளையிலும், வேலை முடிந்து தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களையும் தொழில் பேட்டைகளில் பணிபுரிபவர்களையும் ஏற்றிச் செல்லும் தனியார் பஸ்கள், அதிவேகமாகச் செல்வதால், விபத்துக்கள் பல ஏற்பட்டுள்ளன.

இதேவேளை, வீதியில் செல்லும் பாடசாலை மாவர்கள் முதல் அனைவரும் குறித்த பஸ்கள் செல்லும் போது, அச்ச உணர்வுடனேயே செல்ல வேண்டியுள்ளதாக, மக்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X