Editorial / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், இன்று (22), பாடசாலைக்குச் செல்லும் மாற்றுவழி மூடப்பட்டமையால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் கனிஷ்ட பாடசாலைக்கு பிள்ளைகளை வாகனங்களில் அழைத்துச் செல்லும் பெற்றோர்கள், மாணவர்களை பாடசாலையில் விட்டுவிட்டு, பாடசாலையின் மறுபுறத்தில் உள்ள அரச விடுதிகளின் அருகாமையில் உள்ள மாற்று வழி ஊடாகவே, பாடசாலையிலிருந்து வெளியே செல்கின்றனர்.
இந்நிலையில், இவ்வீதி ஊடாக வாகனங்கள் பயணிப்பதால்,தமக்கு அசௌகரியம் ஏற்படுவதாகத் தெரிவித்து, அங்கு வசிக்கும் ஒருவர், இன்று (22) அவ்வீதியை மூடி, போக்குவரத்தைத் தடைசெய்துள்ளார்.
இதனால், மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அசெளகரியத்துக்கு ஆளாகியதுடன், குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பெற்றோர்கள், வீதியை மூடியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
பின்னர், பெற்றோர்களது வேண்டுகோளுக்கிணங்க வீதி மீண்டும் திறக்கப்பட்டது.
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago