2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, இராமநாதபுரம் கிழக்கில் 600 மீற்றர் வீதி நிரந்தரமாகப் புனரமைக்கும் வேலைகள் நேற்று (03) தொடங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை, வர்த்தக நிலையங்கள், ஆலயங்களை முதன்மைப்படுத்தி குறித்த வீதி,  வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் புனரமைக்கப்படுகின்றது. குறித்த வீதியானது, தற்காலிகப் புனரமைப்பு வேலைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, தற்காலிகப் புனரமைப்பு மேற்கொள்;கின்றபோது கிரவல் தூசிகள் மாணவர்களின் சீருடையினை சேதப்படுத்தி வருவதாக, இப்பகுதி பொது அமைப்புகள் தெரிவித்த நிலையில் குறித்த வீதி நிரந்தர வீதியாகப் புனரமைக்கப்படுகின்றது.

புனரமைப்புப் பணிகளை வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆரம்பித்து வைத்தார். கிளிநொச்சி மாவட்டத்திலே வீதி அபிவிருத்தித் திணைக்களம் பாடசாலைகள், மருத்துவமனைகள் என்பவற்றிற்கு முன்னால் உள்ள வீதிகளை நிரந்தரப் புனரமைப்புகளை மேற்கொண்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X