2025 மே 08, வியாழக்கிழமை

வுனியா தெற்கு சிங்களப் பிரிவில் கொரோனா கொத்தணி

Niroshini   / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த 32 பேருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றனர். இதன்போது, அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

ஆயினும், குறித்த நபர்கள் வைத்தியசாலையில் தங்காமல் தப்பிச் சென்றிருந்தனர். இதன் பின்னர், இது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்த சுகாதார பிரிவினர், குறித்த கிராமத்தில் தேடுதல் நடத்தி ஏழு நபர்களை தனிமைப்படுத்தியிருந்தனர்.

எனினும், தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள், தனிமைப்படுத்தல் விதிமுறையை கடைப்பிடிக்காமல் வெளியில் சுற்றித் திரிந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதார பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதையடுத்து, குறித்த பகுதியை சேர்ந்த 150 பேரிடம் அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுத்தனர்.

அதில், 32 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில், வசிக்கும் அநேக மக்கள் நாடோடிகள் இனம் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X