Niroshini / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு நகர் பகுதியில், சட்டவிரோத வெடிமருந்து மற்றும் கசிப்பபை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரை, 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு – உடையார்க்கட்டு, சுதந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான குறித்த நபர், 200 கிராம் வெடிமருந்து, 1,500 மில்லிலீற்றர் கசிப்பு என்பவற்றுடன், ஞாயிற்றுக்கிழமை (24) மாலை கைதுசெய்யப்பட்டார்.
சந்தேகநபரை, நேற்று (25), முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு, முல்லைத்தீவு பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, நீதிமன்றம் அவரை 72 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
10 minute ago
32 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
32 minute ago
38 minute ago
1 hours ago