Niroshini / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-றொசேரியன் லெம்பெட்
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில், நேற்று (26) மாலை, வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த, 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என்பவர் ஆவார்.
குறித்த நபர், நேற்று (26) காலை 11.30 மணியளவில் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.
சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
15 minute ago
19 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
29 minute ago