Editorial / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், நிலவும் 210 அரச பணியாளர் வெற்றிடங்கள் குறித்து கவனஞ்செலுத்தி, உடன் தீர்வு வழங்குமாறு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று, முல்லைத்தீவு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில், நேற்று (16) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, மாவட்டத்தில், பிரதேச செயலாளர் - 1, உதவிப் பிரதேச - 2 செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் - 7, கணக்காளர்கள் - 2, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - 71, தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் – 8, பொது முகாமைத்துவ உதவியாளர்கள் – 66, கிராம அலுவலர்கள் – 23, சாரதிகள் – 6, அலுவலக பணியாளர்கள் - 24 உள்ளடங்கலாக 210 அரச பணியாளர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
இதனைக் கவனத்தில் கொண்ட பிரதமர், இந்தப் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்குமாறு, அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுக்கு பணிப்புரை விடுத்தார்.
58 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
01 May 2026