2025 மே 15, வியாழக்கிழமை

வெற்றுக்கதிரையுடன் நடைபெற்ற கூட்டம்

Editorial   / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

இன்று நடைபெற்ற துணுக்காய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், திணைக்களங்களின்  தலைவர்கள் பலர் சமூகமளிக்கவில்லை.

துணுக்காய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், இன்று (29), முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் துணுக்காய் பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

இதன்​போது, கூட்டத்தில், திணைக்களங்களின்  தலைவர்கள் பலர் சமூகமளிக்காததை கவனத்தில் கொண்ட துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர், இனிவரும் காலங்களிலாவது, குறித்த அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு அனைத்து திணைக்கள தலைவர்களையும் வரவழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் இந்த அபிவிருத்தி குழுக் கூட்டங்கள் பலனற்றவையாக ஆகிவிடுமெனவும், அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .