Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2022 ஜூலை 28 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 39ஆவது ஆண்டு நினைவு தினமான 'தமிழ் தேசிய வீரர்கள் தினம்' மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரொலே) அலுவலகத்தில் நேற்று (27) நினைவு கூரப்பட்டது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன் மற்றும் தேவன் உட்பட 53 அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது கட்சியின் முக்கியஸ்தர், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஈ.பி.ஆர்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
53 minute ago
54 minute ago
56 minute ago