Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி – பூநகரிப் பிரதேசத்துக்குட்பட்ட நொச்சிமுனை, காக்கைதீவு போன்ற பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்ற வகையில், கரையோரப் பகுதிகளில் வெளிச்சவீடுகளை அமைத்துத்தருமாறு, கிராஞ்சி சிறிமுருகன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்துக்கட்பட்ட கிராஞ்சி சிறிமுருகன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் உள்ள கடற்றொழிலாளர்கள் நொச்சிமுனை, இலவங்குடா, காக்கைதீவு, எருமைதீவு உள்ளிட்ட பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இரண்டு இடங்களில் வெளிச்சவீடுகளை அமைத்துத்தருமாறு தெரிவித்த சங்க நிர்வாகம், தற்போது வீதிக்கு பொருத்துகின்ற சூரிய மின்கலத்தொகுதியுடன் கூடிய மின்விளக்கு ஒன்று பொருத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனுடைய உயரம் மிகக்குறைவாக இருப்பதனால், கடற்றொழிலாளர்களுக்கு சிரமங்கள் காணப்படுவதாகவும் இப்பகுதியில் ஒரு வெளிச்சவீடு ஒன்றை அமைத்துத்தருமாறும், மேற்படி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago