2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகளை மீட்க மும்முரம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

புரெவி புயல், பலத்த மழை காரணமாக, மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய மடு குளப் பகுதியில் மேச்சலுக்குச் சென்ற கால்நடைகள் பல பலியாகியுள்ளதுடன், அதிகளவான கால்நடைகள் காணாமல் போயுள்ளன.

மன்னார், பெரியமடு குளத்தை அண்டிய  பகுதியில் மேச்சலுக்காக சென்ற நிலையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட காற்றுடன் கூடிய தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அதிக அளவான மாடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதுடன், சில மாடுகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து, பெரிய மடுப் பகுதியில் காணமால் போன கால்நடைகளை மீட்கும் பணிகளை கடற்படையும் இராணுவமும் பொதுமக்களின் பக்களிப்புடன் நேற்று (05) மாலை முன்னெடுத்தன. 

இதன்போது, அதிகமான மாடுகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டன. அதேநேரத்தில் காணாமல் போன ஏனைய  மாடுகளை மீட்கும் பணியில் கடற்படை மற்றும் மாவட்ட பிரதேச செயலகங்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X