Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு - வேணாவில் ஸ்ரீமுருகானந்தா வித்தியாலய பாடசாலையின் அதிபரை மாற்றம் செய்து தருமாறு, பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், கிராம பொது அமைப்புகள் ஒன்றிணைந்து கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளாக ஒரே அதிபர் காணப்படுகின்றார். இதனால் அதிபரின் செயற்பாடுகள் காரணமாக பாடசாலையில் புதிதாக இணையும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக காணப்படுகின்றது. அத்துடன், கல்வி கற்கும் மாணவர்கள் விளையாட்டிலும், அனைத்து துறைகளிலும் கவனம் குன்றிக்கொண்டு செல்வதை அவதானிக்க முடிந்துள்ள நிலையைக் கருத்தில் கொண்டு, அதிபரை மாற்றி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளாக பாடசாலை எந்த விதத்திலும் முன்னேற்றம் இல்லாத நிலை தொடர்ந்து கொண்டு வருகின்றது
இந்த கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண கல்வி அமைச்சு, கோட்டக் கல்வி அதிகாரி, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு கடந்த 15ஆம் திகதியன்று கடிதம் மூலம் அனுப்பியும் அதற்கு முன்னரும் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .