2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வேப்பமரக் கன்றுகள் நாட்டிவைப்பு

Editorial   / 2020 மே 25 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலின் பொங்கல் நிகழ்வு, ஜூன் 08ஆம் திகதியன்று நடைபெறவுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள 59ஆவது படையினரின் ஏற்பாட்டில், கோவில் வளாகத்தில், இன்று (25) 30 வேப்பமரக் கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் உள்ள அவலோன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்த மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.

 59ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரோரா, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் உமாமகள் மணிவண்ணன், கோவில் நிர்வாகத்தினர், கோவில் பிரதமகுருக்கள் எனப் பலர் கலந்துகொண்டு, வேப்பமரக்கன்றுகளை நாட்டிவைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .