Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 11 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மேற்கில் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள், கிளிநொச்சி - அக்கராயன் பிரதேச வைத்தியசாலை வரை சேவையில் ஈடுபடாததால், அப்பகுதி மக்கள் 800 மீற்றர் தூரம் நடந்தே வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளதாக, அப்பகுதி பொதுஅமைப்புகள் தெரிவித்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக, பஸ் சேவையை ஏற்படுத்தித் தருமாறு விடுக்கப்பட்டு வரும் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அப்பகுதி பொது அமைப்புகள், கிளிநொச்சி மாவட்டச் செயலாளருக்கு இவ்விடயம் தொடர்பாக பல தடவைகள் வழங்கப்பட்ட கடிதங்களுக்கும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லைடியனவும் குற்றஞ்சாட்டியுள்ளன.
கிளிநொச்சி மேற்குப் பகுதிக்கான சேவையில் ஈடுபடுகின்ற பஸ்கள் அக்கராயன், அம்பலப்பெருமாள் சந்தி வழியாக முழங்காவில், வலைப்பாட்டை நோக்கிப் பயணிக்கின்றன.
குறித்த பஸ்கள், அக்கராயன் பிரதேச வைத்தியசாலைக்குச் சென்று திரும்புவதன் மூலம் வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம், அமதிபுரம், ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம், முக்கொம்பன், கோணாவில், யூனியங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago