2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலை கடமையில் படையினர்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

சுகாதார சேவை தொழில் சங்க ஒன்றியம் விடுத்த அழைப்புக்கு அமைய, வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் நேற்று (24) தொடக்கம் இன்று (25) வரை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதன்படி, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையிலும் சிற்றூழியர்களின் பணிப் புறக்கணிப்பு, இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இதனால், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் மக்களுக்கு எதுவித இடையூறுகளும் ஏற்படக்கூடாது என அதிகளவான படையினர் குவிக்கப்பட்டு, சுகாதார சிற்றூழியர்களின் பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.

அரச ஊழியர்களுக்குரிய பதவி உயர்வு வழங்குதல், பயிற்சிகளின் பின்னர் நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .