Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினரை நாளை (05) மன்றில் முன்னிலையாகுமாறு, மல்லாகம் நீதவான் நீதிமன்றம், நேற்று (03) அழைப்பாணை விடுத்து உத்தரவிட்டது.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் நோயாளர்கள் உட்பட 15 பேருக்கு டெங்கு காய்யச்சல் தாக்கம் ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பில் தெல்லிப்பளைப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் இராஜமேனனால், பலமுறை வைத்தியசாலை நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தியும், வைத்தியசாலை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக தெல்லிப்பளைப் பொதுச்சுகாதாரப் பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .