2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விவசாய உள்ளீடுகள் உணவுக்கானதல்ல

George   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

விவசாய உள்ளீடுகள் உணவுக்கானதல்ல. பயிர்ச் செய்கைக்குரியதென கிளிநொச்சி மாவட்ட கமநல சேவை உதவி ஆணையாளர் ரி.தயாரூபன் தெரிவித்தார்.

அக்கராயன் கமநல சேவை நிலையத்தில் ஐ.சி.ஆர்.சி ஆல் விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (30) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்திலே கடந்த காலங்களில் விவசாய உள்ளீடுகளை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். சில விவசாயிகள் அதனைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். பல விவசாயிகள் சரியாகப் பயன்படுத்தாததன் காரணமாக தோல்வி அடைந்திருக்கின்றார்கள். இன்று வழங்கப்படுகின்ற விவசாய உள்ளீடுகள் விலை அதிகமானவை.

இவற்றினை உணவிற்குப் பயன்படுத்தக் கூடாது. வரும் காலபோகத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு உற்பத்தியினை அதிகரிக்கவேண்டும். இப்பயிர்ச் செய்கைக்கான நிலப்பண்படுத்தலுக்கு கமநல சேவை நிலையத்தின் உழவு இயந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கான ஒழுங்குகளை செய்திருக்கின்றோம். இப்பயிர்ச் செய்கையில் உற்பத்திகள் அதிகரிக்கப்படுகின்றபோது சந்தை வாய்ப்பினையும் ஏற்படுத்தித் தருவோம் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை விவசாய உள்ளீடுகளை மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென ஐ.சி.ஆர்.சி இன் பொருளாதார பாதுகாப்பு முகாமையாளர் எம்.கமில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எல்லோரும் உற்சாகத்துடனும் முயற்சியுடனும் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்ற போதுதான் பயிர்ச் செய்கை வெற்றியடையும். தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். தங்களின் முன்னேற்றத்திற்காக உதவிய எமது நிறுவனத்திற்கும் வெற்றி கிடைக்கும். இப்பொருட்களை சரியான நேரத்தில் பயிர்ச் செய்கையில் பயன்படுத்தி வெற்றியடைய வேண்டும் என்பதே எங்களின் எல்லோரினதும் ஆர்வமாகவுள்ளது.

இப்பயிர்ச்செய்கை முயற்சிக்காக ஐ.சி.ஆர்.சி 46 இலட்சம் ரூபாய் வரையான நிதியினைப் பயன்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .