Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு உடையார்கட்டுக்குளத்தில் இருந்து வள்ளுவர்புரம், இளங்கோபுரம், தேராங்கண்டல், மாணிக்கபுரம் ஆகிய கிராமங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை உருவாக்குமாறு இக்கிராமங்களின் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இக்கிராமங்களைச் சேர்ந்த 15,000 மக்கள் வாழ்கின்ற இப்பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி இல்லாததன் காரணமாக விவசாய முயற்சிகள் மேற்கொள்ள முடியாமல் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் வறுமை நிலையில் வாடுவதாகவும் எனவே, உடையார்கட்டுக் குளத்திலிருந்து மேற்படி கிராமங்களுக்கான நீர்ப்பாசன வசதியினை உருவாக்குவதன் மூலம் இக்கிராமங்களின் மக்களும் விவசாய முயற்சிகளில் ஈடுபட்டு குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திக் கொள்ள முடியுமென இக்கிராமங்களின் மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இறுதியாக நடைபெற்ற புதுக்குடியிருப்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், உடையார்கட்டுக் குளத்திலிருந்து நீர்ப்பாசன வசதியினை ஏற்படுத்தித் தாருங்கள். தங்களுடைய கிராமங்களை நீர்ப்பாசன வசதியின்றி புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் குளத்தின் அணைக்கட்டினை உயர்த்துவதன் மூலமும் அபிவிருத்தி செய்வதன் மூலமும் தங்களுடைய கிராமங்களும் நீர்ப்பாசன வசதி கொண்ட கிராமங்களாக மாறி அபிவிருத்தி அடைய முடியுமெனவும் மேற்படி கிராமங்களினால் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், கூட்டத்தில் இறுதி முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago