2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

10 குடும்பங்களுக்காக தோட்டக் கிணறு

Princiya Dixci   / 2016 நவம்பர் 03 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில் தோட்டச் செய்கைகளை மேற்கொள்ளும் 10 குடும்பங்களுக்கு தோட்டக்கிணறுகள் அமைக்கப்படவுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலர் இ.ரமேஸ் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலகத்தின் 2.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 10 குடும்பங்களுக்கு தோட்ட செய்கை மேற்கொள்ளக்;கூடிய வகையில் தோட்டக்கிணறுகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான பயனாளிகள் ஒவ்வொரு கிராமத்திலிருந்து ஒவ்வொரு குடும்பம் தெரிவு செய்யப்படவுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள அம்பாள்புரம், விநாயகபுரம், பாலைப்பாணி, கொல்லவிளாங்குளம், செல்வபுரம், பூவரசன்குளம், பாலிநகர், சிறாட்டிகுளம், பாண்டியன்குளம், வன்னிவிளாங்குளம் ஆகிய 10 கிராமங்களிலிருந்து பயனாளிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச செயலர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .