2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

3,114 குடும்பங்களுக்கு மின்சாரம் வேண்டும்

George   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களில், 3,114 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டிய தேவையுள்ளதாக, பிரதேச செயலகத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரைதுரைப்பற்று பிரதேசத்தில் மீளக்குடியேறியுள்ள 13,213 குடும்பங்களில், இதுவரையில் 7,555 குடும்பங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. பிரதேசத்துக்கு மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ள போதும், வீட்டு இணைப்பு வழங்கப்படாமல் 1,257 குடும்பங்கள் உள்ளன.

இதனைவிட, பிரதேசத்துக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்படாமையால், மின் இணைப்புக்களைப் பெற்றுக்கொள்ளாத 1,857 குடும்பங்கள் இருக்கின்றன.

இந்நிலையில், அரசினூடாகக் கிடைத்த நிதியின் ஊடாக, முதலாவது கட்டத்தில் 493 குடும்பங்களுக்கும், இரண்டாவது கட்டத்தில் 59 குடும்பங்களுக்கும், மூன்றாவது கட்டத்தில் 40 குடும்பங்களுக்கும் மின்னிணைப்பு வசதிகள் வழங்கப்படவுள்ளன. மீள்குடியேற்ற அமைச்சினது நிதியுதவியுடன் 130 குடும்பங்களுக்கான மின்சார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

அத்துடன், ஆயிரத்து 65 குடும்பங்களுக்கு கடனடிப்படையில் மின்னிணைப்புக்களை வழங்குவதற்கான விண்ணப்பப் படிவங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .