2025 ஜூலை 07, திங்கட்கிழமை

102 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

George   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கஅகரன், எஸ்.என்.நிபோஜன்

ஒரு கோடி ஐம்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி விஜயமுனி தெரிவித்தார்.   

வவுனியா -யாழ். வீதியில் பயணித்த வானை சோதனையிட்ட பொலிஸார், பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 102 கிலோகிராம் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். அதனையடுத்து, வான் சாரதியை கைதுசெய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .