2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'சர்வதேச சிறுமிகள் தினம்' அனுஷ்டிப்பு

George   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

சர்வதேச சிறுமிகள் தினம், வவுனியாவில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டதுடன் வடக்கு பெண்களின் மாற்றத்துக்கான வலையமைப்பு, கவனயீர்ப்பு ஊர்வலமொன்றனை வவுனியாவில் எற்பாடு செய்திருந்தது.

வவுனியா தபால் நிலையத்துக்கு முன்பாக இருந்து வவனியா மாவட்ட செயலகம் வரை சென்ற இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள், 'சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு நீதிகோரல்' என்ற தொனிப்பொருளில் ஊர்வலத்தினை மேற்கொண்டனர்.

இதன்போது சிறுமிகளுக்கு எதிரான வன்முறைக்கு துரித நீதிவேண்டும், ஜனாதிபதி அவர்களே சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தேசிய பிரச்சனையாக அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .