Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட தனியார் காணிகள் எவையும் இதுவரை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றஞ்சாட்டினார்.
வடக்கில் காணிகள், உரிமையாளர்களிடம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டாலும் முல்லைத்தீவில் எந்தக் காணியும் இதுவரை வழங்கப்படவில்லை. இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
காணி கொள்ளுதல் சட்டத்தின் கீழ் கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.
காணி சுவீகரிப்பு தொடர்பில் சட்டங்கள் மற்றும் சுற்றுநிருபங்கள் பின்பற்றப்படுவதாக காணி அமைச்சர் தெரிவிக்கின்றபோதும், வடக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்புக்களுக்காக எந்தவொரு சட்டமோ அல்லது சுற்றுநிருபமோ பயன்படுத்தப்படுவதில்லை எனவும், இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இராணுவ மயமாக்கப்பட்ட காணிகள் எந்த சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்டன எனக் கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முல்லைத்தீவில் கேப்பாபுலவு, கொக்குளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பகுதிகளில் பூர்வீக காணிகள் சுவீகரிக்கப்பட்டு இன்னமும் உரிமையாளர்களிடம் வழங்கப்படவில்லை என்றார்.
இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளில் பெரும்பாலானவை விவசாயக் காணிகள் என்பதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் காணி உரிமையாளர்கள் வறுமையில் வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
8 minute ago
10 minute ago
31 minute ago