2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'நாங்கள் விடுதலைக்காக போராடும் இனம்'

George   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

'சமகாலத்தில் துயிலுமில்லங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறுகின்றனர்.தியாகி திலிபனின் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இவற்றுக்கெல்லாம் காரணம் தமிழ் மக்களின் முயற்சியும் அவர்களின் அரசியல் பயணத்தில் உள்ள பெருமையும் சகிப்புத்தன்மையும் தான்' என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.

உறுப்பினர் சி.சிவமோகனின் தலைமையில் நடைபெற்ற வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனின் அஞசலி கூட்டத்தில் இரங்கலுரையாற்றும் போதே வியாழக்கிழமை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'நாங்கள் விடுதலை பெற்ற இனமல்ல, விடுதலைக்காக போராடும் இனம். விடுதலை பெற்ற நாட்டில் இருந்து பேசவில்லை. விடுதலைக்காக போராடிக்கொண்டு பேசுகின்றோம்.

இழப்புக்கள் இடைவெளிகளை தந்ததாக தோற்றுப்போனதாக பயந்து போனதாக இருக்கக்கூடாது. அன்ரனி ஜெகநாதன் நல்லதுக்காக வாழ்ந்திருக்கின்றார், நல்ல வழிகளை விட்டுச்சென்றிருக்கின்றார். நாங்கள் மக்களை தவறான முன் உதாரணம் கொடுத்து வழிநடத்த முடியாது. நான்கு அறைகளுக்குள் எங்களின் விவாதங்களை வைத்துக்கொண்டு எங்களுடைய மக்களுக்காக நாங்கள் பயணிப்போம்' என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .