Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
George / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
“நான் அங்கம் வகித்த கட்சி காரணமாகவே மக்கள் என்னை தாக்கினர்” என, நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் சந்தேக நபர் யாழ். மேல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி சந்தைக்கு சென்ற ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கல்லொன்றால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணை வியாழக்கிழமை (06) யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபர், சாட்சி கூண்டில் நின்று வாக்கு மூலம் அளித்தார்.
அதன் போது பொலிஸார் என்னை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த வேளை மக்கள் வெளியில் போராட்டம் நடத்தினார்கள். என்னை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரினார்கள் என தெரிவித்தார்.
அதன் போது நீதிபதி, “ஏன் மக்கள் உமக்கு எதிராக போராட்டம் நடாத்தினார்கள்” என வினாவினார்.
அதற்கு சந்தேகநபர், “நான் இருந்த இடம் பிழை. கட்சியொன்றில் இணைந்திருந்தேன். அக்கால பகுதியில் சில அதிகாரங்களில் சிலவற்றை செய்தேன். அதனால், நெடுந்தீவு மக்கள் என் மீது வெறுப்பாக இருந்தார்கள். அதனாலேயே எனக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
35 minute ago
40 minute ago