Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முன்னாள்போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் ஊடகப்பரிவினால் வெளிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டதற்கமைவாகக் கடந்த மாதம் முதல் வடக்கின் ஐந்து மாவட்ட வைத்தியசாலைகளிலிலும் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றது. இதுவரை 156 பேர் மருத்துவ பரிசோதனக்கு சமூகமளித்துள்ளனர்.
தொடர்ந்தும் இவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் மாகாணத்தின் ஐந்து மாவட்ட வைத்தியசாலைகளிலும் கீழ்காட்டப்பட்ட நேரஒழுங்கில் நடைபெறும். ஓவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் யாழ்ப்பாண, முல்லைத்தீவு பொது வைத்தியசாலைகளில் மு.ப 8 மணிக்கும், கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் பி.ப. 4 மணிக்கும் இந்த மருத்துவ பரிசோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதாகவும் இதுவரை பரிசோதனைகளுக்கு சமூகமளிக்காதவர்கள் குறிப்பட்ட நாளில் சமூகமளிக்கமுடியுமெனவும் அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago