Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவில் மீன்பிடி வீழ்ச்சியடைந்திருப்பதன் காரணமாக, 4,300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவென, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,
'தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக மீன்பிடியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தொழிலுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு குறைவான மீன்களே அகப்படுகின்றன.
இதனால், மீனவக் குடும்பங்கள் வறுமை நிலையில் வாடுகின்றன. போரினாலும் ஆழிப்பேரலையினாலும் நெருக்கடிகளை எதிர்கொண்ட மக்கள், 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய றோலர்களின் வருகை பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் சட்டவிரோத மீன்பிடியினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது அவர்கள் காலநிலையினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் நவீன வசதிகளுடன் எதிர்காலத்தில் ஆழ்கடலில் தொழிலில் இறங்குவதன் மூலமே கூடுதலான மீன்பிடியில் ஈடுபட முடியும். தற்போது காணப்படுகின்ற வசதிகளற்ற மீன்பிடியும் கடற்றொழிலாளர்களைப் பாதித்துள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago