Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Niroshini / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
மாவட்டத்தின் வளங்கள் மாவட்டத்துக்குள்ளேயே பயன்படுத்துவதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மணல், கிரவல் கூடுதலாக வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுவது தொடர்பாக வினாவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மணல், கிரவல் என்பன மாவட்டச் செயலகத்தின் கண்காணிப்பில் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படுகின்றது. ஏனெனில், யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தே அவை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அவைகூட மாவட்டத்தின் அபிவிருத்திக்கு முதன்மை கொடுத்தே யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படுகின்றது.
அனுமதிகள் வழங்கப்படாதுவிட்டால் பிழையான வழிகளில் எமது வளத்தை கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வழங்கப்படுகின்ற அனுமதிகள் தொடர்பாக இறுக்கமான கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றது என்றார்.
இதேவேளை, மாவட்டத்தின் வளங்களை அபிவிருத்தி நடவடிக்கைக்காக பயன்படுத்துகின்றபோது அவை சட்டரீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பாக அதிகாரிகள் கவனஞ் செலுத்த வேண்டும்.
கிராம மட்டங்களில் கிராம அலுவலர்கள் மிகுந்த விழிப்புடன் பணியாற்றி சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அவை தொடர்பான முறைப்பாடுகளைத் தெரியப்படுத்த வேண்டும். அதேவேளை, பொதுமக்களின் ஒத்துழைப்பில்தான் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
14 minute ago
35 minute ago