2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மழை காரணமாக முல்லைத்தீவில் 1,250 குடும்பங்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 28 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

அண்மைய நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1250 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் உள்ள ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒட்டுசுட்டான், மாந்தை மேற்கு, மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளிலேயே அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த காலநிலை தொடர்ந்து நீடிக்குமானால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிமாக பாடசாலைகளிலும் பொதுநோக்கு மண்டபங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் சமைத்த உணவு என்பன கூட்டுறவுச் சங்கத்தின் கூடாக வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X