2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு 18 முகாமைத்துவ உதவியாளர்கள் நியமனம்

Super User   / 2014 ஜனவரி 07 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு மூவினங்களையும் சேர்ந்த 18 முகாமைத்துவ உதவியாளர்கள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அரச கொள்கைகளுக்கு இணங்க மொழி மற்றும் சமூக கட்டமைப்பினை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தென் மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முகாமைத்துவ உதவியாளர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனா என அவர் குறிப்பிட்டார்.

இவர்களில் 11 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் 6 பேர் தமிழர்களாகவும் ஒருவர் முஸ்லிம்களாகவும் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இவர்களில் கரைச்சி பிரதேச செயலகத்திற்கு நால்வரும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகங்கத்திற்கு ஆறு பேரும் பூநகரி பிரதேச செயலகத்திற்கு ஐந்து பேரும் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு மூன்று பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி முகாமைத்துவ உதவியாளர்கள் நேற்று முதல் கிளிநொச்சி மாவட்ட செயலக பிரிவிலுள்ள பிரதேச செயலகங்களில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .