2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் சிறியளவில் மழை; 339 பேர் இடம்பெயர்வு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 10 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.சுகந்தினி

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த மழையைத் தொடர்ந்து இதுவரையில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 339 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த மழையைத் தொடர்ந்து இம்மக்கள் தங்களது வீடுகளை விட்டு நேற்றுமுன்தினம்  செவ்வாய்க்கிழமையும் நேற்று புதன்கிழமையும் வெளியேறியுள்ளனர்.

இப்பகுதிகளில் மழையால் நிலம் ஈரளிப்பாகக் காணப்படுவதன் காரணமாகவே இம்மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் மழை வெள்ளப் பாதிப்பு இல்லையெனவும்  கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கு.சுகுணதாஸ் இன்று தெரிவித்தார்.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அம்பாள் நகர், பன்னங்கண்டி, பெரிய பரந்தன் ஆகிய பகுதிகளிலிருந்தும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் ஞானிமடம்,  நல்லூர் ஆகிய பகுதிகளிலிருந்தும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் கர்ணன்கேணி பகுதியிலிருந்தும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தர்மபுரம் பகுதியிலிருந்துமே இம்மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 62 குடும்பங்களைச் சேர்ந்த 219 பேரும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 7 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேரும் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 4 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும் பூநகரி பிரதேச செயலாளர் 19 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இவ்வாறு  வெளியேறியுள்ள மக்கள் 7 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்  கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் சிறியளவிலேயே மழை பெய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X