2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 14 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க, நவரத்தினம் கபில்நாத்

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆவணப் படத்தினை வெளியிட்ட சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக வவுனியாவில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கலாபோவஸ்வௌ, நாமல்கம, பூனாவ, மதவாச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து வருகை தந்தவர்களே வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று மதியம் 12 மணியில் இருந்து 1 மணி வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சனல் 4 ஊடகவியலாளர்கள் வட பகுதிக்கு வரக் கூடாது எனவும், அவர்களை அரசாங்கம் உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கோரியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது சனல் ஊடகவியலாளர்களை வெளியேற்று, எமது ஒற்றுமையை குழைக்காதே, சனல் 4 வேண்டாம் போன்ற வாசங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

சனல் 4 ஊடகவியலாளார்கள் வட பகுதிக்கு செல்லவுள்ள நிலையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்;டது. இதனால் ஏ - 9 வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் பாதிப்படைந்தது.

இதில் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மபால செனவிரத்ன, ஜெதிலக உள்ளிட்டோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • AJ Thursday, 14 November 2013 09:27 AM

    தமிழ் மொழியில் தயவு செய்து எழுதாதிங்க எங்கள் அன்புக்குரிய சிங்களவர்களே. அப்படியே பதாதைகள் எழுத வேண்டும் என்றால் சரியாக தமிழ் எழுத கூடியவர்களிடம் சொல்லி எழுதி படிங்க. எங்கள் தாய் மொழி தமிழை கொச்சை படுத்த வேண்டாம்.

    Reply : 0       0

    Ash Thursday, 14 November 2013 11:21 AM

    வரவழைத்து முகத்திலடிப்பது வழமையாகிவிட்டது...

    Reply : 0       0

    Manithan Friday, 15 November 2013 06:34 PM

    இலங்கைக்கு இனி சங்கு தான்

    Reply : 0       0

    Manithan Friday, 15 November 2013 06:47 PM

    இலங்கைக்கு சங்கு நிச்சயம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X