2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை வைத்திருந்த 40 பேருக்கு எதிராக வழக்கு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 13 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம்

வவுனியாவில் கடந்த ஒரு வாரகாலத்தில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் 40 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியும் தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரியுமான ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியும் தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரியுமான ப.சத்தியலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,

'வவுனியாவில் மழையின் பின்னர் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 5 பேர் இதுவரையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  சிறுமியொருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ள நிலையில் தற்போது 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 பேர் சிறுவர்களாவர். தற்போது சிறுவர்களே அதிகம் டெங்குநோய்த் தாக்கத்திற்குள்ளாகின்றனர்.

நுளம்பு பரவும் இடங்களை வைத்துள்ளவர்கள் எவராகவிருந்தாலும் வழக்குத் தாக்கல் செய்வதில் பின்னிற்காமல் செயற்படுகின்றோம்.
பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும்;  சூழலில் நுளம்பு பெருகாமல் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக நீர்த்தாங்கிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தொடர்ச்சியாக பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார மாதுக்கள், தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று நுளம்பு பெருகும் இடங்களை பார்வையிட்டு வருகின்றனர்' எனக் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X