2025 ஜூலை 24, வியாழக்கிழமை

வவுனியாவில் வெள்ளத்தால் 63 குடும்பங்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 07 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம் கிராம அலுவலகர் பிரிவில் கந்தன்குளம் கிராமத்திலுள்ள 43 குடும்பங்களைச் சேர்ந்த 170 பேரும் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள 20 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேரும்; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவிப்பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

மேலும், கந்தன்குளம் கிராமத்திலுள்ள 10 குடும்பங்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி பிள்ளையார் கோவிலிலும் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள  20 குடும்பங்கள் வெளியேறி அருகிலுள்ள வீடுகளிலும்; தங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். 

வவுனியா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையிலிருந்து மழை பெய்து வருகின்றது. கடந்த 24 மணித்தியாலங்களில் 188  மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவர்கள் தங்கியிருந்த தற்காலிக வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளன.

இதேவேளை, பிரமணாளங்குளம் பகுதியில் மண் வீடொன்றின் இரண்டு பக்கச் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. இவ்வீட்டிலுள்ளவர்களுக்கும் மாற்று இட வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு  வவுனியா மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையம்; தறப்பாள்களை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, சாஸ்திரிகூழாங்குளக்கட்டு; சிறு சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .