2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் யுத்தத்தால் அங்கவீனமான 7,500 பேர்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 06 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,500 மாற்றுத்திறனாளிகள் உள்ள அதேவேளை, கடந்த யுத்தத்தினால் அங்கவீனமடைந்த 7,500 பேர் உள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் சதாசிவம் ஷகிலா  இன்று புதன்கிழமை  தெரிவித்தார்.

இவர்கள் அடிப்படை வசதிகள் இன்றியும் வாழ்வாதார உதவிகள் இன்றியும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்களுக்கு மாதாந்த நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குமாறு எமது சங்கத்தின் ஊடாக முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்;.

மேலும்,  மாந்தை கிழக்குப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு இப்பகுதியில் கால்நடைப் பண்ணை ஒன்றையும் பால் பதனிடும் நிலையம் ஒன்றையும் அமைத்துத் தருமாறும் கோரியுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X