2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கண்டாவளையில் 80 மலசலகூடங்கள் நிர்மாணம்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 11 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மீள்குடியேற்ற அமைச்சின் நீர் மற்றும் சுகாதார திட்டத்தின் கீழ், கிளிநொச்சி - கண்டாவளை பிரதேசத்தில் 80 மலசலகூடங்களும் இரண்டு பொது கிணறுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக கண்டாவளை பிரதேச செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாண்டு ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த வேலைத்திட்டங்கள், இவ்வாண்டு நிறைவுக்குள் முழுமையாக பூர்த்தியடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

மலசலகூடம் ஒவ்வொன்றும் 50 ஆயிரம் ரூபாய் செலவிலும் கிணறு ஒவ்வொன்றும் தலா 1 இலட்சம் ரூபாய் செலவிலும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

குமரபுரம், பரந்தன், உமையாள்புரம், கோரக்கன்கட்டு, ஊரியான், முரசுமோட்டை, கண்டாவளை பெரியகுளம், கல்மடுநகர், தர்மபுரம் மேற்;கு, தர்மபுரம் கிழக்கு, பிரமந்தனாறு, புன்னைநீராவி, புளியம்பொக்கணை ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் இந்த மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.

முரசுமோட்டை மற்றும் புன்னைநீராவி ஆகிய இடங்களிலும் கிணறுகள் அமைக்கப்படுகின்றன. கண்டாவளை பிரதேசத்தில் கடந்த 2013ஆம் ஆண்டும் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக 34 மலசலகூடங்களும் 02 பொதுக்கிணறுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .