2025 ஜூலை 21, திங்கட்கிழமை

81 மனித எலும்புக்கூடுகளும் அநுராதபுரத்திற்கு மாற்றம்

Super User   / 2014 ஏப்ரல் 29 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 81 மனித எலும்புக்கூடுகளும் மனித எச்சங்களும் இன்று செவ்வாய்க்கிழமை (29) மேலதிக பரிசோதனைகளுக்காக அனுராதபுரம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என மன்னார் பொது வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி வரை குறித்த திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து 81 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக மேற்குறிப்பிட்ட எழும்புக்கூடுகள் 81 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலைக்குச் அனுராதபுர மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் வைத்தியர் டி.எல்.வைத்திய ரெட்ன தலைமையிலான குழுவினர் சென்றுள்ளனர்.

குறித்த 81 எலும்புக்கூடுகளும் மனித எச்சங்களும் மன்னார் வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இவர்களுடன் விசேட குற்றப்புலனாய்வுப்பிரிவினரும் மன்னார் வைத்தியசாலையில் பிரசன்னமாகியிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .