2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் 103.95 மில்லியனில் அனர்த்த குறைப்பு வேலைத்திட்டங்கள்

Menaka Mookandi   / 2015 ஜனவரி 01 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

அனர்த்த முகாமைத்துவ அமைச்சால், கிளிநொச்சி மாவட்டத்தில் 103.95 மில்லியன் ரூபாய் செலவில் அனர்த்த குறைப்பு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்க்கும் பொருட்டு, கல்வெட்டுக்கள் அமைத்தல், மண் அணைகள் அகற்றுதல், குடிநீர் விநியோகம், அனர்த்தத்தை தாக்குப்பிடிக்கும் வேலைத்திட்டங்கள், அவசரகால நிதி கொடுப்பனவு, உலர்உணவுக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட 184 வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த வேலைத்திட்டங்களை மேற்கொண்டதில் கிளிநொச்சி மாவட்டத்தில் அனர்த்தங்களை குறைக்கக்கூடியதாகவிருந்ததாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .