2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

11 வருடங்களின் பின்னர் கொலைச் சந்தேக நபர் கைது

Niroshini   / 2021 ஜூலை 27 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இரட்டை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், 11 வருடங்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டுளார்.

வவுனியா - ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில், 2011ஆம் ஆண்டு கணவன், மனைவி கொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சநகேகிக்கப்படும் இருவர் அந்தக் காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டு, வவுனியா நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும் குறித்த இருவரும் நீதிமன்ற வழக்குதவணைகளில் ஆஜராகமல் தலைமறைவாகியிருந்தனர்.

அவர்களில் ஒருவர் 11 வருடங்களின் பின்னர் ஓமந்தை பொலிஸாரால், ஞாயிற்றுக்கிழமை (25) கைதுசெய்யப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X