2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

12 பேரும் நிபந்தனையுடன் விடுதலை

Freelancer   / 2023 மார்ச் 18 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் தில்லைநாதன்

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்  12 பேரும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த  12 மீனவர்களும் கடந்த  ஞாயிற்றுக்கிழமை வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை  நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு  12 மீனவர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பயன்படுத்திய படகு அரசுடமையாக்கப்பட்டுள்ளது, மேலுமு் குறித்த 12 மீனவர்களையும் இந்தியாவிற்கு அனுப்பும் பணிகளில் இந்திய துணை தூதரகத்தினர் ஈடுபட்டு வருகிறார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .