2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

13,000 குடும்பங்கள் வரட்சியால் பாதிப்பு

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு மாவட்டத்தில், இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து நிலவிவரும் வரட்சி காரணமாக, மாவட்டத்தின் மூன்று பிரதேசங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 889 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சி.லிங்கேஸ்வரகுமார் தெரிவித்தார்.

இதுவரையில், புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் வட்சியால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களே திரட்டப்பட்டு உள்ளதாகவும் மணலாறு, ஒட்டுசுடுசுட்டான், மாந்தை கிழக்குப் பிரதேசங்களின் விவரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களில், குடிநீருக்குத் தட்டுப்பாடுள்ள இடங்களுக்கு, பிரதேச சபை ஊடாக நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .